
தூத்துக்குடியில் தம்பியைக் கத்தியால் தாக்கிய அண்ணனை காவல்துறை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரவியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோன்ஸ்ராஜ். இவரது மகன் செல்வகுமார் (24). இவர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் செல்வகுமார் கடந்த 21-ந்தேதி மதுகுடித்துவிட்டு தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதனை செல்வகுமாரின் தம்பி தேவராஜ் (22) தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், தேவராஜை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரைக் கைது செய்தார்.