தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 16 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 192 ஆக அதிகரித்துள்ளது. இன்று 15 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 636 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் 148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் 408பேர் உயிரிழந்துள்ளனர்.