திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 இளஞ்சிறார்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை அருகே உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (30). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். நேற்று திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே வைத்து அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் அவரை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக திருச்செந்தூர் வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் நட்டார் (48), பரமசிவன் மகன் கணேசன் (30), மற்றும் 3 இளஞ்சிறார்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


