தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவை நிகழ்ச்சியாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி பொன் சுப்பையா மஹாலில் பாஜக வடக்கு மண்டலம் சார்பில் நடைபெற்ற இம்முகாமில் அற்புதம் மருத்துவமனை மருத்துவர் ஜேம்ஸ் சுந்தர் சிங் எலும்பு மருத்துவம் குறித்தும், அகர்வால் கண் மருத்துவமனை பொது மற்றும் லேப்ராஸ்கோபி மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் அனிஷ், ஜே.ஜே. பன்னோக்கு பல் மருத்துவமனை ஜெபிஷா ராஜ்மோகன் ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். பீவெல் மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் உயர் ரத்த அழுத்த பரிசோதனை நடைபெற்றது.
இம் முகாமில் 117க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளைப் பெற்று பயணடைந்தனர். 10 நபர்கள் தானாக முன்வந்து தங்களை கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். மேலும் இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சண்முகசுந்தரம் கலந்துகொண்டார். மாவட்ட பொருளாளர் பரமசிவன், வடக்கு மண்டல் தலைவர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


