தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தேசிய புலனாய்வு முகமை கண்காணிப்பாளராக (என்ஐஏ) நியமிக்கப்பட உள்ளதால் அவரை உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய எஸ்பி விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


