தூத்துக்குடி அருகே பேருந்தில் பயணம் செய்தபோது தவறிவிழுந்து படுகாயம் அடந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி மகன் கோபி கிருஷ்ணன் (41). இவர் கடந்த 20ம் தேதி தூத்துக்குடியில் இருந்து ஏரல் நோக்கி செல்லும் டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் பயணம் செய்த அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


