தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்றது
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அணி மற்றும் பிரிவு மாவட்ட தலைவர்கள் பட்டியலை மாநில தலைமை வெளியிட்டது. இதன்படி பாஜக அணி மற்றும் பிரிவு மாவட்ட தலைவர்களுக்கான அறிமுக கூட்டம் தெற்கு மாவட்ட மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாரதிய ஜனதா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது
இதில் அணியை சார்ந்த ஏழு மாவட்ட தலைவர்களும் பிரிவை சார்ந்த 24 மாவட்ட தலைவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் கேஎன்ஆர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் செயலாளர்கள் முத்துராமலிங்கம் சிவராமன் மாசாணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


