ஆண்டு தோறும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோவின் பணியாளர் நாயகத்தின் சுற்றறிக்கைப் படி பல நாடுகளின் கலாசார அமைச்சர்களின் வழியுறுத்தலின் காரணமாக 1791 ஆகஸ்ட் 22, 23 ஆம் தேதி இரவு தற்போதைய ஹெய்டியில் இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவுகூறும் வகையில் இந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டது.
தற்காலத்தில் அடிமைத்தனம் பல விதங்களாக நடந்து வருவதாக ‘அடிமை ஒழிப்பு சங்கம்’ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த அறிக்கைபடி நவீன கால அடிமை முறையாக அவர்களால் கூறப்பட்டுள்ள ஒரு சில அடிமைத்தனத்தை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
இன்று இலட்சக்கணக்கான மக்கள் அடகு முறையில் பொருட்களை வைத்து மறைமுகமாக மாட்டிக்கொள்கின்றனர். இதில் ஒருநபர் முதலாளிகளிடம் தன்னை அடகு கொடுத்து பெரிய வட்டியில் கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் தானும் மாட்டிக் கொண்டு தன் மனைவி மக்களையும் அடகு கொடுத்து, தலை முறை தலை முறையாக அந்த அடிமைத் தனத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.


