தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 23.08.2021 முடிய மொத்தம் 8,379 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 24.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியில்
தூத்துக்குடி மாநகராட்சியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, பாத்திமா நகர், கணேஷ் நகர், திரேஸ்புரம், தருவை ரோடு, மடத்தூர், முள்ளக்காடு, லூர்தம்மாள்புரம் மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் நிலையங்கள், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி இஞ்ஞாசியார்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மில்லர்புரம்
ஊரக பகுதிகள்
புதுக்கோட்டையில் 1.ராமநாச்சியார்புரம், 2.அல்லிக்குளம், 3.மாப்பிள்ளையூரணி லெப்ரசி ஹோம், 4.கீழ கூட்டுடன்காடு, கருங்குளம் வட்டாரத்தில் 1.அய்யனார்குளம், 2.கரையடியூர், 3.நல்லார்குளம், 4.வி.கோவில்பத்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் 1.கொம்புக்காரன்பொட்டல், 2.பழையகாயல், 3.ஸ்ரீவைகுண்டம், 4.அடைக்கலாபுரம், உடன்குடி வட்டாரத்தில் 1.சத்யாநகர், 2.சோலைகுடியிருப்பு, 3.சுதந்திரநகர், 4.செட்டிவிளை,
திருச்செந்தூர் வட்டாரத்தில் அரசு பொது மருத்துவமனை – திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை – காயல்பட்டினம் வட்டாரத்தில் 1.முருகன் குறிச்சி, 2.முத்தையாபுரம், 3.கோமன்புதூர், 4.பூந்தோட்டம், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 1.சேர்ந்தமங்கலம், 2.வாரண்டிவேல், 3.கடையனோடை, 4.தங்கையாபுரம், சாத்தான்குளம் வட்டாரத்தில் 1.பெரியதழை, 2.பிரகாசபுரம், 3.சாத்தான்குளம்,
கோவில்பட்டி வட்டாரத்தில் அரசு பொது மருத்துவமனை – கோவில்பட்டி, நகராட்சி அலுவலகம் – பூங்கா சாலை, கோவில்பட்டி., பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி – நக்கலக்கோட்டை, நகர்நல மையம் – ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி., ஓட்டப்பிடாரம் அங்கன்வாடி மையம் – சந்திரகிரி, அங்கன்வாடி மையம் – கீழ செய்தலை, அங்கன்வாடி மையம் – தெற்கு வீரபாண்டியபுரம், ரமேஷ் பிளவர்ஸ் கம்பெனி – சந்திரகிரி, கயத்தார் பேரூராட்சிகள் – கயத்தார், சத்துணவு மையம் – அரசூர், ஆரம்ப சுகாதார நிலையம் – கயத்தார், ஆரம்ப சுகாதார நிலையம் – கழுகுமலை, பேரூராட்சிகள் – கழுகுமலை, சத்துணவு மையம் – சி.ஆர்.காலனி, ஆரம்ப சுகாதார நிலையம் – கழுகுமலை,
சத்துணவு மையம் – காலம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம் – வெள்ளாளங்கோட்டை, சத்துணவு மையம் – அச்சங்குளம், ஆரம்ப சுகாதார நிலையம் – கடம்பூர், விளாத்திகுளம் கலைஞர் கிளினிக் – விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் – வேலாயுதபுரம், சமுதாய நலக்கூடம் – குமராகிரி, சமுதாய நலக்கூடம் – கமலாபுரம், சமுதாய நலக்கூடம் – ஓ.துரைச்சாமிபுரம், சமுதாய நலக்கூடம் – படர்ந்தபுளி, புதூர் ஊராட்சி அலுவலகம் – கே.துரைச்சாமிபுரம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கோவில் குமரெட்டியாபுரம், சமுதாய நலக்கூடம் – கீழ கல்லூரணி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – மேல கல்லூரணி, ஊராட்சி அலுவலகம் – வேம்பார், சமுதாய நலக்கூடம் – சிவலார்பட்டி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கம்பத்துபட்டி, சத்துணவு மையம் – சுப்புலாபுரம்,
பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


