தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் தனிப்படை போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூர் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ஆதிச்சநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (எ) போஸ் என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் இசக்கிமுத்து (எ) போஸை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து (எ) போஸ் மீது ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி மாவட்டம், சிவந்திப்பட்டி, பாளையங்கோட்டை, பேட்டை, மூலைக்கரைப்பட்டி, மானூர், தாழையூத்து, திருநெல்வேலி தாலுகா, மேலப்பாளையம், தச்சநல்லூர், திருநெல்வேலி ஜங்ஷன், மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.


