தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பனிமய மாதா கோவில் திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் ஜான் செல்வம், ஜெரால்டு மற்றும் மைக்சன், துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர் தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், ரெக்ஸ்லின், ரிக்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்


