முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன்- லெட்சுமி நரசிம்மருக்கு திருப்பணி கும்பாபிசேகம் நடத்த ஆயத்த கூட்டம் நடைபெற்றது.
முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிசேகம் நடந்து 12 வருடம் முடிந்த நிலையில் மீண்டும் கும்பாபிசேகம் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான ஆலயம் லெட்சுமி நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தோடு இணைந்து ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோயில்கள் திருப்பணி செய்து கும்பாபிசேகம் நடந்த மாவட்ட, மாநில அளவிலான கமிட்டி அனுமதி பெற்று திருப்பணி செய்ய தயார் நிலையில் உள்ளது. முதல் கட்டமாக கடந்த வாரம் இந்த கோயிலில் கிணறு தூர் வாரப்பட்டது. திருப்பணி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
குணவதி அம்மன் கைகர்ய சபா தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கைகர்ய சபா செயலாளர் மகாதேவன், லெட்சுமி நரசிம்மர் கைங்கர்ய சபா தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சேசப்பன், பொருளாளர் சுவாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரபாண்டீஸ்வரர் ஆலய அறங்காவலர் காமராசு வரவேற்றார். குணவதி அம்மன் கோயிலில் திருப்பணி செய்தல், சுற்றுப்புறச்சுவர் பழுது பார்த்தல், கோபுரம் திருப்பணி செய்தல் உள்பட பணி செய்ய மதிப்பீடு தயார் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு திருப்பணி செய்து கோயிலை கட்ட அடிக்கல் நாட்டவும் தீர்மானிக்கப்பட்டது.
இதையொட்டி அதிகாலை குணவதி அம்மன் கோயிலுக்கு நடை திறக்கப்பட்டது. அதன் பின் சிறப்பு அபிசேகம் அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் ராமவிநாயகர், சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், பைரவருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து லெட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாகம்பிரியாள் கோயில் அர்ச்சகர் செல்வம் பட்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டத்தில் ஊர் பிரமுகர்கள் பிச்சகண்ணு, மாசானம், அங்கப்பன், மாடசாமி, ஆறுமுகம், ஆறுமுகசாமி மற்றும் மன்னார் கோயில் பெரிய நம்பி சுவாமி வழிகாட்டுதலின் படி திருமாளிகை சிஷ்யர்களும் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர்கள் முருகன் உள்பட அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.



