1856 – இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]
1859 – சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1880 – கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.
1894 – பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1902 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.
1913 – கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.
1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
1963 – ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.
1973 – அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
1989 – தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.
2010 – ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.
2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2013 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.


