தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் 83வது அவதார பெருமங்கல விழா, ஆடிப்பூர விழா, மன்றம் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடந்தது.
இந்த விழாவை முன்னிட்டு தாமிரபரணியில் நீராதாரம் செழிக்கவும், மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம் பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரச்சாரக் குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் செந்தில் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், இணைச்செயலர் செல்லத்துரை, வட்டத் தலைவர் வண்டி மலையான், செல்வம், மன்ற தலைவி ஆவுடை செல்வி, இளைஞர் அணி பொறுப்பாளர் சதீஷ், மன்ற பொறுப்பாளர்கள் பூதத்தான், மல்லிகா, சண்முகவடிவு, கமலா, செல்வி, லெட்சுமி, சீனித்தாய், வேப்பலோடை அழகுமாரி, அருணாசலத்தம்மாள், கிருஷ்ணம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


