தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் இருந்து வரப்பெறும் நிவாரணப் பொருட்களை இனம் வாரியாகப் பிரித்து கிராமம் வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் ஏரல் ஆகிய வட்டங்களில் அதிகப்படியான வெள்ளச்சேதம் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் மேற்படி வட்டங்களில் இயல்பான வாழ்க்கை திரும்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டும், பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் கொண்டு செல்வதை உறுதிப்படுத்தவும், வட்ட வாரியாக வட்டாட்சியர்களுக்கு பொறுப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முரளிதரன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு) தூத்துக்குடி – தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம்.
ஞானராஜ், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு தேசிய நெடுஞ்சாலை) தூத்துக்குடி – தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம்.
சங்கரநாராயணன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம்.
ராஜசெல்வி, தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம்.
அமுதா, தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம்.
கண்ணன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) திருச்செந்தூர் – ஆறுமுகமங்கலம் குறுவட்டம்.
மலர்தேவன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) திருச்செந்தூர் – ஆறுமுகமங்கலம் குறுவட்டம்.
ராஜூவ்தாகூர் ஜேக்கப், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) திருச்செந்தூர் – ஆழ்வார்திருநகரி குறுவட்டம்.
முத்து, தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – பெருங்குளம் குறுவட்டம்.
தங்கையா, தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) கயத்தார்; – பெருங்குளம் குறுவட்டம்.
பாலசுந்தரம், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு இஸ்ரோ) திருச்செந்தூர்- திருச்செந்தூர் குறுவட்டம்.
கோபால், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – ஆத்தூர் குறுவட்டம்
முருகேசன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – உடன்குடி குறுவட்டம்.
சுவாமிநாதன், கலால் மேற்பார்வை அலுவலர், தூத்துக்குடி – ஆத்தூர் குறுவட்டம்.
ராதாகிருஷ்ணன், தனி வட்டாட்சியர் (ச.பா.தி.) ஸ்ரீவைகுண்டம் – ஸ்ரீவைகுண்டம் குறுவட்டம்;.
நம்பிராயர், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சிப்காட்) தூத்துக்குடி – செய்துங்கநல்லூர் குறுவட்டம்.
பரமசிவன், தனி வட்டாட்சியர் (நிலஎடுப்பு சென்னை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை) கோவில்பட்டி – ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதிகள்.
கோபாலகிருஷ்ணன், தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந.) திருச்செந்தூர் – ஸ்ரீவைகுண்டம் குறுவட்டம்.
செல்வபிரசாத், தனி வட்டாட்சியர் (கேபிள் டி.வி.) தூத்துக்குடி – வல்லநாடு குறுவட்டம்.
இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல்,
சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அப்பகுதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புணரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


