கொலைவழக்கில் ஜாமீனில் வந்து 8 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள வாலிபரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேயன்விளை புதூரை சேர்ந்த தங்கராஜ் மகன் கணேஷ்ராம். இவர், ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் டிரான்ஸ்போர்ட் கம்பெனி நடத்தி வந்தார். இவர், கடந்த 2015-ம் ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், அவரிடம் வேலைபார்த்த தொழிலாளி மதன் (24) கைது செய்யப்பட்டார்.
இவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கு தூத்துக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த மதன், தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இதை தொடர்ந்து அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி, அவரை வருகிற நவ.26-ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


