கருங்குளம் யூனியன், வடவல்லநாடு பஞ்.,சை சேர்ந்தது ராசாங்குளம். இக்குளம் பராமரிப் பின்றி இருப்பதால், இக்குளத்திற்கு வரும் தண்ணீர், அருகிலுள்ள வயல்களில் பாய்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு, குடிநீர் கொண்டு செல்லும் பைப், இக்குளத்தின் அருகே உடைக்கப்பட் டுள்ளதால், இக்குளத் தில் தண்ணீர் தேங்கி உபரிநீர், அருகிலுள்ள பயிர்களுக்கு சென்று விடுகின்றன. இக்குளத்தை பராமரிக்க வேண்டும் என, தற்போதைய கலெக்டர் செந் தில்ராஜியிடம்,இப்பகுதி விவசாயிகள் சென்று புகார் மனு அளித்தனர். இது குறித்து, கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார், இக்குளம் சீர மைப்பு சம்மந்தமான கருத்துக்கேட்பு கூட்டத் திற்கு, அழைப்பு விடுத் திருந்தார். அதன்படி, கூட்டம் கருங்குளம் யூனியன் ஆபிசில் நடந் தது.
தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ராசாங்குளம் விவசாய சங்கத்தலை வர் தம்பான், செயலாளர் நங்கமுத்து, வடவல்லநாடு வி.ஏ.ஓ., சிவராமன், வடவல்லநாடு பஞ்., தலைவி பேபி சங்கர், விவசாய சங்கப் பொருளாளர் பாலு, நாணல்காட்டான்குளம் முருகேசன், விளாத்திக் குளம் விவசாய சங்கத் தலைவர் சுப்பிரமணியன், மாயகிருஷ்ணன், பத்திரகாளி, யுனியன் பொறியாளர் கார்த்திக், யுனியன் கவுன்சிலர்கள் பரமேஷ்வரன், முத்துரா மலிங்கம் உட்பட பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய ராசாங்குளம் பாதுகாப்பு சங்க செயலாளர் நங்க முத்து கூறியதாவது:
“2017ம் முதல் ஆண்டு இக்குளம் யாருடைய பராமரிப்பில் உள்ளது. என்பதை கண்டு பிடிக்க முயன்றோம். ஆனால் கடந்த ஆண்டு தான், இது யூனியன் பராமரிப்பில் உள்ளது என்பதை, தகவல் அறியும் சட்டம் மூலம் கண்டு பிடித்தோம். 140 ஏக்கர் பராமரிப்பில் உள்ள இக்குளத்தை ஆழப்படுத்தவேண்டும், மாநகராட்சிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பைப் உடைப்பை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என கூறினார்.
தொடர்ந்து பேசிய சங்கத் தலைவர் தம்பான் கூறுகையில், இக்குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அமலைச் செடிகளை அப்புறப்படுத்த வேண்டும், தூர்வார வேண்டும், கரைகளை உயர்த்த வேண்டும், மடைகளை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து விவசாயிகள், தங்கள் கருத்துக்களை கூறினர். தாசில்தார் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “குளத்தை பார்வையிட்டு அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


