வள்ளியூர் அருகே உள்ள கிழநேரியை சேர்ந்தவர்; சத்தியசீலன். நல்லாசிரியர் விருது பெற்ற இவர் தெற்கு கள்ளிகுளம் அலாசியஸ் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், அகில இந்திய வானொலியில் 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது 80 வயது ஆகும் இவர் கடந்த வாரம் திருக்குறள் குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். எழுத்துலகில் பல்துறை பல சாதனை புரிந்த சிகரம் நேற்று இரவு அகலா மரணமடைந்தார். அவரின் மறைவிற்குத் தமிழ் அமைப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


