
தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் மழைநீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையில் திங்கட்கிழமை அன்று செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்தைத் தொடங்கிவைத்தார். வாகனத்தில் மழைநீர் சேமிப்பு பற்றிய குறும்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார அலுவலகங்கள் முக்கிய நகரங்களில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் இன்று செய்துங்கநல்லூர் பேருந்து நிலையத்தில் ஒளிபரப்பப்பட்டது.குறும்படத்தைப் பொதுமக்கள் பலர் பார்த்து மழைநீர் சேமிப்பு பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர்.குறும்படத்தைப் பேருந்து ஒருங்கிணைப்பாளர்கள் ஒளிபரப்பி வருகின்றனர்.