
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞராக டி.மோகன்தாஸ் சாமுவேல், மாவட்ட உரிமையியல் வழக்கறிஞராக ஜே.பாலன், சிறப்பு மாவட்ட குற்றவியல் வழக்கறிஞராக வி.எல்லம்மாள், கூடுதல் மாவட்ட குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் வழக்கறிஞராக பி.ஆனந்த் கேப்ரியேல் ராஜ், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்களாக டி.சேவியர், எம்.மாலாதேவி, கூடுதல் உரிமையியல் (LAOP) ஜே.பிரான்சிஸ் ஜூடுவினோத், அரசு பிலீடராக டி.சுபேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கோவில்பட்டி கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக எஸ்.வி.சம்பத்குமார், திருச்செந்தூர் குற்றவியல் வழக்கறிஞராக எம்.பாரிகண்ணன், திருச்செந்தூர் கூடுதல் உரிமையியல் வழக்கறிஞராக ஜே.எஸ்.டி.ஜாத்ராக், கோவில்பட்டி மாவட்ட உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எம்.ராமச்சந்திரன், ஸ்ரீவைகுண்டம் உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எம்.ஜாஜஹான், சாத்தான்குளம் உரிமையில் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக ஏ.ரகுபத்மன், திருச்செந்தூர் உரிமையியல் முனிசீப் நீதிமன்ற வழக்கறிஞராக எஸ்.விஜி ஆகியோர் நியமனம் செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.