தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நாசரேத் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிகாட்டுப் பகுதியில் மனிதனின் எலும்பு கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நாசரேத் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மனிதனின் தலை, இடுப்பு எலும்பு, கால் உள்ளிட்ட மனிதனின் எலும்புகள் மற்றும் ஒரு ஜோடி காலணி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனே தேரிக்காடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளை கைப்பற்றிய போலிசார் கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடு யாருடையது? கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதா? அல்லது வேறு எங்கும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நாசரேத் பகுதிகளில் கடந்த ஒரு வருடத்தில் காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்குகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நாசரேத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேரிக்காட்டில் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


