ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இரண்டு நாள்கள் நடைபெறும் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு முதல்நாளான 20-ந்தேதி காலை 5.30 மணிக்கு மங்கல இசை, திருமுறை பாராயணம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம் ஆரம்பம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, பிரம்மச்சாரி பூஜை,தீபாராதனைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, காலை 9 மணிக்கு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன மகாவிஷ்ணு ஹோமம், நவக்கிரக ஹோமம், துர்கா ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாஹுதி, தனபூஜை, கோபூஜை,தொடர்ந்துதீபாராதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நிகழ்ச்சியும்,6மணிக்கு வேத பாராயணம், திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ஆச்சாரியர் ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள் ஆரம்ப நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து அங்குரார்பணம், வேதிகார்ச்சனை, திரவ்யாகுதி, பூர்ணாஹுதி, அலங்கார தீபாரதனை, தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 9 மணிக்கு குருஹோரையில் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்துஇரண்டாம் திருவிழாவான 21-ந்தேதி (நேற்று) அதிகாலை 5 மணிக்கு மங்கலஇசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, பிம்பசாந்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், இரண்டாம் கால யாக சாலை பூஜை ஆரம்பம் நிகழ்ச்சியும்,இதனைத்தொடர்ந்து விசேஷ ஹோமம், திரவ்யாஹுதி, வஸ்திராஹுதி, மகாபூர்ணாஹுதி, நிகழ்ச்சியும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, விமானம் மூலஸ்தானம், முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 1மணிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனை நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு அலங்காரமும்தீபாராதனையும் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஶ்ரீவைகுண்டம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கந்தசிவசுப்பு, பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் சோமவள்ளிமுத்து, பூசாரி ராஜாசிவம், மற்றும் ஶ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் தசரா குழு நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


