திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற ஆக.1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடித்திருவிழா இன்று காலையில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, காலை 7.05மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அய்யாவழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை நடக்கிறது. 6.30 மணிக்கு பால் அன்ன தர்மம், காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
தேரோட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பகல் 2 மணிக்கும், இரவு 8 மணிக்கும் அன்ன தர்மம், இனிமம் வழங்கு தல் நடக்கிறது.
நள்ளிரவு 1மணிக்கு அய்யா வை குண்டர் காளை வாகனத்தில் பவனி வருதல், இரவு 2 மணிக்கு தர்மம், இனிமம் வழங்குதல் நடக்கிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திர ஆகிய வாகனத்தில் பவனிவருதல் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை மக்ககள் செய்து வருகின்றனர்.


