தூத்துக்குடியில் நடிகா் திலகம் நினைவு நாளில் வசந்த மாளிகை திரைப்படம் புதிய தொழில் நுட்ப முறையில் திரையிடப்பட்டது
தூத்துக்குடியில், நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வசந்த மாளிகை திரைப்படம் மேம்படுத்தபட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய சிவாஜி ரசிகா் மன்றம் சாா்பில் மாவட்ட தலைவா் எட்வின்பானு தலைமை வகித்தார்.
தொழில் அதிபா் பி.பி.எம்.டி பொன்குமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நடிகா் திலகத்தின் படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார். தியேட்ட அதிபர் கேஸ்எஸ்பிஎஸ் கண்ணன் வரவேற்றார். விழாவில் எச்எம்எஸ் தொழிற்சங்க மாவட்ட செயலாளா் ராஜலட்சுமி, இந்து முண்ணனி குனசீலன், மணிசேகா், கனகராஜ் உட்பட சிவாஜி ரசிகா்கள் பலா் கலந்து கொண்டனர்.


