விளாத்திகுளத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை காவல் உதவி கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்தில், தலைக்கவசம் அணிவோம், வாகனம் ஓட்டும் போது கைபேசி உபயோகிப்பதை தவிர்ப்போம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை மதிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 11 காவல் நிலையங்களில் இருந்து 84 காவலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். விளாத்திகுளம் ஆற்று பாலம் பிள்ளையார் கோவிலில் இருந்து துவங்கிய பேரணி, கோவில்பட்டி மற்றும் மதுரை சாலை, காய்கறி மார்க்கெட் வழியாக சென்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.


