ஸ்ரீவைகுண்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திடலில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தொடங்கப்பட்டு 84 வது தினவிழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி தொடங்கப்பட்டு 84 வது தினவிழா இன்று நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திடலில் நடைபெற்ற விழாவிற்கு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை. சுரேஷ்தேவர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம், மாநில மாணவரணி செயலாளர் கொம்பையா பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சில்வர் பாண்டியன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த நிர்வாகிகளான மகாசபை மருதுபாண்டியன், கால்வாய் முத்துபாண்டியன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஸ்ரீவைகுண்டம் சிவன் கோவில் அருகில் உள்ள அன்னை சத்யா அம்மையார் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் துரை சரவணன், உடையார், கேரளா மணிதேவர் பாண்டியன், சேதுபதி, சகாயம், இரா.ஹரிஹரன், அருணாசலம், வெள்ளதுரை, மகாராஜன், திருமலை குமார், செல்வம், முருகன், சுரேஷ், செல்வம், முருகன், வேல்பாண்டியன், சுரேஷ், அம்பை பேச்சிமுத்து, ராஜேஷ், மணிகன்டன், கீழநத்தம் முத்து, கொம்பையா, கணேஷ், கில்லி மணி, இசக்கிமுத்து, லட்சுமணன், பேச்சிமுத்து, கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


