சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை சம்பவத்தின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஜூன் 22 ஆம் தேதி ஊரடங்கு நேரத்தில் கடை வைத்திருந்த வைத்திருந்ததாக கூறி வியாபாரிகள் தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெண்ணிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளத்தில் 3 நாள் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி மற்றும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு சாத்தான்குளத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரிகளின் கடை முன்பு நடந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் புகைப்படத்திற்கு அவரது ஜெயராஜின் மகள் பெர்சி, உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.


