தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அவர் அதை செல்போன் கடையில் இருந்து அனைத்து செல்லப்பட்டு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் எஸ் ஐ கில் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ஆகியோரால் இரவு முழுவதும் படு பயங்கரமாக தாக்கப்பட்டு பின்னர் அவர்களை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இரண்டு தினங்களுக்கு பின்பு ஜூன் 22ஆம் தேதி இரவு அடுத்தடுத்து தந்தை மகன் என இருவரும் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று அவர்களுக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஜெயராஜின் மகள் பெர்சி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை எனவும் கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த இருவருக்கும் உடனடியாக நீதி வழங்க வேண்டிவேண்டியும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு பல்வேறு நபர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும், தவறு செய்ய நினைக்கும் எவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


