தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர், செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
பயிற்சியை தென்திருபேரை ஹெஜோ நேச்சுரல் ஹெல்த் கிளினிக் மருத்துவர்கள் லயன் டாக்டர் ஆராக்கியபழம், டாக்டர் அனி சினேகா முடநீக்கியல் நிபுணர் ரோஸ் லில்லி நேசகுமாரி ஆகியோர் மாணவர்களுக்கு ஆசனங்கள், பிராணாயாமம், முத்திரைகள், பந்தரா போன்றவற்றை செய்து காட்டி பயிற்சி அளித்தனர். கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் வரவேற்று யோகா குறித்த விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.
முடிவில் முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாமாண்டு துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் முதலாம் ஆண்டு ஆசிரியர் நட்டார் சரவணன், முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


