தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதன்படி தூத்துக்குடியில் 16 கடைகள் மூடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்தில் 138, கோவை மண்டலத்தில் 78, மதுரை மண்டலத்தில் 125, சேலம் மண்டலத்தில் 59, திருச்சி மண்டலத்தில் 100 டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 140 டாஸ்மாக் கடைகளில் 16 டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன.
அதன்படி தூத்துக்குடி பொன்னகரம், வட்டக்கோவில், அண்ணாநகர் மெயின் ரோடு, பிரையண்ட்நகர், திருச்செந்தூர் ரோடு மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, டபிள்யூ.ஜி.சி. ரோடு, புதிய பஸ் நிலையம், பாலவிநாயகர் கோவில் தெரு, தூத்துக்குடி கல்லூரி நகர், கயத்தார் கடம்பூர் ரோடு, தெற்கு சுப்பிரமணியபுரம், கோவில்பட்டி எட்டயபுரம் ரோடு, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி பால்பாண்டி பேட்டை தெரு, கோவில்பட்டி புது ரோடு, உடன்குடி செட்டிகுளம் மார்க்கெட் ரோடு ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை (வியாழக்கிழமை) முதல் மூடப்படுகின்றன.


