2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத வலிமையான தூத்துக்குடியை உருவாக்கும் நோக்கத்தோடு துணை இயக்குநர், மருத்துவப் பணிகள் (காசநோய்) டாக்டர். சுந்தரலிங்கம் அறிவுறுத்தலின்பேரில், மாவட்டம் முழுவதும் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் தேசிய காசநோயகற்றும் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சார்பாக காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் 22.05.2022 கீழ்புத்தனேரி துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர்.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்புரை ஆற்றினார்.இம்முகாமில் டாக்டர்.கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கீழ்புத்தநேரி காட்டு நாயக்கன் குடியிருப்பில் காசநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சளி மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும் இந்த குழுவினர் காசநோய் பாதித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள், காசநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள், சுகாதார கல்வி மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இம்முகாமில் சுகாதார பார்வையாளர் முத்து லக்ஷ்மி, செவிலியர் மரிய அந்தோனி டாரதி, பெண் சுகாதார தன்னார்வலர் சோபனா தேவி, மருத்துவமனை பணியாளர் அழகம்மாள், தம்பான் சுகாதாரத் துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இறுதியாக கீழ்புத்தனேரி சுகாதார ஆய்வாளர் ஆகாஷ் நன்றி கூறினார்.


