ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமர குருபரர் சுவாமிகள் துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜப்பா வெங்கடாச்சாரி தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் அலுவலக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா குழந்தைகள் பாலின பாதுகாப்பு பற்றி வரிவாக பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் உறுப்பினர் வக்கீல் சங்கரன், ஊட்டச்சத்து வட்டார மேற்பார்வையாளர்கள் ப்ரிக்ஸ் ஒயிட். இந்திரா ஆலோசனைகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


