
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 6ஆம் சம்பவத்தின் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15பேர் இறந்தனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த 15 பேர் படத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணைமேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூாிதங்கம், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி உள்பட பலர் கலந்து கொண்டனர்.