தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.89.41 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சோதனையில் இன்று (21.04.2026) வரை கைப்பற்றப்பட்ட விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ஒரு கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 218 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7,57,517 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையான விளக்கம் அளித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின் பேரில் இதுவரை 89 லட்சத்து 41ஆயிரத்து 268 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் விசு மகாஜன் தெரிவித்துள்ளார்.


