தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் ஐ.லியோனி உட்பட பலர் உரையாற்றினர்.
தூத்துக்குடி சங்கரப்பேரி பிரிவு சாலை அருகில் உள்ள மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், நடைபெற்று வரும் 4-வது புத்தக திருவிழாவில் “வரலாற்றில் தூத்துக்குடி” என்ற தலைப்பில் முனைவர் ராஜேந்திரன் (இந்திய ஆட்சிப்பணி பணிநிறைவு) அவர்களும், “புத்தகத்தோடு உரையாடுவோம் – சமத்துவமாய் உரையாடுவோம்” என்ற தலைப்பில் கிரேஸ் பானு, “வாக்கினிலே இனிமை வேண்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி கலந்துகொண்டு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



