தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மழைகாலம் முடிந்த நிலையில் தற்போது பனி காலம் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பனிமூட்டம் அடர்ந்து காணப்பட்டது. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான செய்துங்கநல்லூர், கருங்குளம், புதுக்குடி போன்ற பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
இதற்கிடையில் திருச்செந்தூர் திருநெல்வேலி பிரதான சாலையில் பனிமூட்டம் காரணமாக அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். மேலும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். அவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தினர்.