அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீடு முகவா் பணிக்கு, 18 – 50 வயதுக்கு உள்பட்ட 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
அவா்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். இதற்கு ரூ.5,000 காப்பீட்டுத் தொகையை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அந்தந்த பகுதியிலுள்ள அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். இறுதியில் காப்பீடு தொகை வட்டியுடன் திருப்பி அளிக்கப்படும்.
அஞ்சலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 27ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளா், கோவில்பட்டி – 628501 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04632-220368 (கோவில்பட்டி), 04636-222313 (சங்கரன்கோவில்), 04633-222329 (தென்காசி) ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.