வசவப்பபுரத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
கடந்த 23.12.2021 அன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசவப்பபுரம் காளியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் கீழபுத்தனேரியைச் சேர்ந்தர அரவிந்த் என்பவரை முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளியான அரவிந்த் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிக்கை தாக்கல் செய்தார்.
மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் குற்றவாளி அரவிந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் அரவிந்தை இன்றைய தினம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.