தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக காணப்படுகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நெல் சாகுபடிக்கு முன்பாக நிலத்தை பண்படுத்துதல், மண் பரிசோதனையின் முக்கியத்துவம், இரகதேர்வு, விதை நேர்த்தி செய்தல், மற்றும் உர மேலாண்மை குறித்த தகவலைகளை பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பயிர் 30 நாட்கள் கடந்துள்ளது. தற்போது பயிர் பாதுகாப்பது குறித்த தகவல் தேவை என்பதின் அடிப்படையில் நெல்லில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு டயல் அவுட் கான்பெரென்ஸ் முறையில் நடத்தப்பட்டது. இதில் பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, நாணல்காடு மற்றும் ராஜபதி கிராமங்களை சார்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனர். வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் அருண்ராஜ் விவசாயிகளுடன் கலந்துரையாடி பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


