தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எசவன்குளம் கிராமத்தில் விவசாயத்துடன் கூடிய கால்நடை வளர்ப்பு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. அதிகமான விவசாயிகள் கால்நடை வளர்ப்பை நம்பியே விவசாயம் செய்து வருகிறார்கள். காலநிலைக்கேற்ப கால்நடைகளை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. மழை காலங்களிலும் கோடை காலங்களிலும் பல்வேறு நோய்கள் கால்நடைகளை தாக்குகிறது. இதுவே கால்நடை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட காரணமாக அமைகிறது. அந்த காலகட்டங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நோய்களை பாதுகாப்பத்திற்க்கான ஆலோசனைகளை பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோமாரி நோயின் தாக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் காணப்படுகிறது. கோமாரி நோயை தடுக்கவும் அதை பராமரிப்பதற்க்கான ஆலோசனைகளை நேரிடியாக வழங்கவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருவைகுண்டம் வட்டாரத்தில் உள்ள எசவன்குளம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை மருத்துவர் கணபதி, முன்னாள் இணை இயக்குனர்n அவர்கள் கால்நடைகளுக்கு மருத்துவம் அளித்தார். குடல் புழு மருந்து கொடுத்தல் ,சினை பரிசோதனை மற்றும் நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் போன்ற செயல்பாடுகள் முகாமில் நடைபெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் 200 க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


