ரிலையன்ஸ் அறக்கட்டளை தொழில்நுட்பத்துடன் கூடிய பண்ணைப்பள்ளி திட்டத்தினை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலத்தினை பண்படுத்துவது முதல் அறுவடை வரை உள்ள தொழில் நுட்பங்களை வேளாண் வல்லுநர்கள் மூலம் வழங்கி வருகிறது. செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதினால் விவசாயிகளும் மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் தற்போது இயறக்கை விவசாயத்தின் மீது நாட்டம் செலுத்துகிறார்கள். திருவைகுண்டம் வட்டாரத்தில் உள்ள தோழப்பன்பண்ணை கிராமத்தில் இந்த ராபி பருவத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். அவர்களின் தேவையின் அடிப்படையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை ஏற்பாடு செய்திருந்தது. முன்னாள் தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜகுமார் அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் இயற்கை விவசாயத்தின் தேவை, மூலிகைகள் மூலம் பூச்சி விரட்டி தயாரித்தல், பழக்காடி தயாரித்தல், வேம்பு எண்ணை கரைசல் தயாரித்தல், தொழுஉரம், பசும்தாழ் உரம் மற்றும் பஞ்சகாவியா தயாரிப்பது குறித்து செயல்முறை விளக்கம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 40 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.


