முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்டவளாக பணிகள் நிறைவுபெறும் நிலையில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில் வருகின்ற ஜூலை மாதம் 7 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
இதற்காக ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள சண்முக விலாசம் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சண்முக விலாசம் மண்டபத்தை பொறுத்தவரை திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகும். கோயிலுக்குள் இருந்து அலங்காரத்தில் வெளியே வரும் சண்முகர் மற்றும் ஜெயந்திநாதர் இங்கு அமர்ந்து தான் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தொடர்ந்து இங்கு தான் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெறும்.
இந்த சண்முக விலாசம் மண்டபத்தில் கருங்கல் தூண்கள் அனைத்தும் பிரஷர் மூலம் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


