செய்து-ங்கநல்லூர் யூனியன் அலுவலத்தில் வைத்து மக்களிடையே இலவச வீட்டு மனை பட்டாவிற்கான விண்ணப்பம் பெற ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் வருகை தந்தார். அவரிடம் மக்கள் பல்வேறு மனுக்களை கொடுத்தனர்.
அவரிடம் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இந்த ஊரை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என்று தாங்கள் சட்டமன்றத்தில் பேசி வருகீறார்கள். உங்களுக்கு மிக்க நன்றி. செய்துங்கநல்லூர் நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோட்டில் அமைத்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. விபத்தில் மாட்டி கொள்பவர்களை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள். எனவே செய்துங்கநல்லூர் துணை சுகாதார நிலையத்தினை அரசு சுகாதார நிலையமாக முழுநேர ஆஸ்பத்திரியாக மாற்றி தரவேண்டும். இந்த ஆஸ்பத்திரியுடன் வல்லநாடு மருத்துவனையின் கீழ் இயங்கி வரும் வி.கோவில்பத்து, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, ஆழிகுடி, வசவப்பபுரம், மு.கோவில்பத்து, கீழப்புத்தனேரி, மு.புதுக்கிராம் பஞ்சாயத்துகளை இணைத்து செய்துங்கநல்லு-ர் அரசு மருத்துவமனையை நிறுவ வேண்டும். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பலன் பெறுவார்கள்.
செய்துங்கநல்லூரில் அரசு நூலக கட்டிடத்தில் காலியாக உள்ள கட்டிடத்தில் ஊர்வசி இலவச அகடாமி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
செய்துங்கநல்லூர் தவ்கீத் ஜமாத் சார்பில் அப்துல் என்பவர் கொடுத்த மனுவில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஊர்வசி அமிர்த ராஜ் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


