ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் இன்று சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் வரவேற்புரை ஆற்றினார்.
யோகா ஆசிரியர் இசக்கிமுத்து யோகாதின சிறப்புரையாற்றி பயிற்சி வழங்கினார். பள்ளியின் தேசிய மாணவர்படை பொறுப்பாளர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளி செயலர் முத்தையா, பள்ளி கல்வி அபிவிருத்தி சங்க செயலர் கோட்டை சண்முகநாதன், பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் தியாகச்செல்வன், துணைத்தலைவர் வெங்கடாச்சாரி, ஸ்ரீவைகுண்டம் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் மாரியப்பன், முருகன் பள்ளி ஆசிரியர்கள் சௌந்திரராஜன், ஜெயமுருகன், முகமது ஜாபர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


