தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த நதி பொதிகைமலையில் உருவாகி புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகிறது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத் தேவைகளுக்காகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் தினம் தோறும் கோடி கணக்கான லிட்டர் தண்ணீர் இந்த தாமிரபரணி நதி கொடுக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நதி தற்போது சாக்கடையாலும், ஆக்கிரமிப்புகளாலும் தனது அழகு நிலையை இழந்து வருகிறது.
இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் தற்போது தண்ணீர் குறைவாக உள்ளதால் அணைக்கட்டின் நடுவே ஆங்காங்கே மணல் திட்டுகள் தெரிய ஆரம்பித்துள்ளது. இதில் அணைக்கட்டு வழியாக நீந்தி செல்லும் சிறுவர்கள் அந்த மணல் திட்டுகள் மேல் அமர்ந்து விளையாடி மகிழ்கின்றனர்.


