தமிழகம் முழுவதும் வருகின்ற காலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்காக ஆங்காங்கே பருவ மழை தொடங்கியுள்ளது. மேலும் இன்று திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 3 மணி அளவில் வானம் கடும் இருண்ட மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடிரென 3.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரத்திற்கு உட்பட்ட செய்துங்கநல்லூர், கருங்குளம், கொங்கராயகுறிச்சி, வி.கோவில்பத்து, நாட்டார்குளம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்ததால் துர்நாசம் வீசியது. சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக சென்றனர்.


