தூத்துக்குடி மாவட்டம் உதயமான 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நடும் பணியை தூத்துக்குடி கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் துவங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க மதர் சமூக சேவை நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிலத்தடி நீரை மேம்படுத்த, புயல், சூறாவளி, பூகம்பம்,மற்றும் மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, வாய்க்கால்கரை, குளத்தங்கரை, மற்றும் கடற்கரை, தீவுபகுதிகளிலும் சாலை ஓரங்களிலும்,அரசு புறம்போக்கு இடங்களிலும், விருப்பப்பட்டு கேட்கின்ற தனியார் இடங்களிலும் பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள் அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 36 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒரே நாளில் 36 ஆயிரம் பனை மர விதை நடும் பணி துவக்க விழா தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் அருகே உள்ள. கடற்கரை பகுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவர் டாக்டர் எஸ் ஜே கென்னடி அனைவரையும் வரவேற்றார்
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கி செந்தில்ராஜ் தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆண்டு ஆகிறது. இதைக் கொண்டாடும் வகையில் இன்று 36 ஆயிரம் மர விதைகள் விதைக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் இயக்குனர் கென்னடி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் அவர் முயற்சி பாராட்டுக்குரியது. அனைத்து பொதுமக்களும் இணைந்து பனை விதை விதைப்பது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என கூறினார். அதனைத் தொடர்ந்து
மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் முன்னிலை வகித்து பனை மரக் கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது தமிழகத்தில் 33% மரங்கள் இருக்க வேண்டும் ஆனால் 23 சதவிகிதம் மரம் மட்டுமே உள்ளன. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வெறும் நான்கு சதவீத மரங்கள் மட்டுமே உள்ளது ஆதலால் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் கென்னடி முயற்சி மேற்கொண்டு இருப்பது போல அனைத்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முயற்சி எடுத்து தொடர்ந்து மரங்களை நட வேண்டும் என கேட்டுக்கொண்டார்
விழாவில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமதும்,காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிறுவனர் செய்யது அப்துர் ரஹ்மான், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு இயக்க மாநில செயலாளர் டேனியல் மோசஸ், மாநில துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல தலைவர் ராம்குமார், செயலாளர் இம்மானுவேல், காயல்பட்டினம் நகரத் தலைவர் முத்துக்குமார், திருச்செந்தூர் நகர தலைவர் கண்ணன், ஆத்தூர் நகர தலைவர் கருப்பன், சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் சண்முகசுந்தரம், ஆழ்வை ஒன்றிய தலைவர் பட்டு வேல் மற்றும் மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், வாவு கல்லூரி மாணவிகள் காயல்பட்டினம் எல் கே மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன் பட்டினம் மேல்நிலைப்பள்ளி பசுமை படை மாணவர்கள் கலந்து கொண்டு பனை மர விதைகளை,பனை கன்றுகளை நட்டனர் விதைத்தனர். முடிவில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாடு இயக்க மாவட்ட தலைவர் ஏ ஆர் டி ராஜ்குமார் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்


