வரதட்சனை கேட்டு பெண்ணை துன்புறுத்திய கணவரை ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலிசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வடக்கு புறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜ் மனைவி ஜெயராணி (35). இந்த தம்பதியருக்கு கடந்த 2013ல் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 20 பவுன் நகையை வரதட்சனையாக கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் 5 பவுன் நகை கேட்டு அழகுராஜ் மனைவியை துன்புறுத்தி உள்ளார். இதற்கு அவரது தாயார் கசங்காத்தா(60), அக்கா மாரியம்மாள்(36) ஆகியோரும் உடந்தையாக இருந்தார்களாம்.
இதுகுறித்து ஜெயராணி, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா வழக்குப் பதிந்து கணவர் அழகுராஜை இன்றைய தினம் கைது செய்தார். மேலும் அவரது தாய், மற்றும் சகோதரியை போலிசார் தேடி வருகின்றனர்.


