செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஹிந்தி தேர்வு நடந்தது. இதில் 743 பேர் பங்கேற்றனர்.
திருச்சி தட்சிணா ஹிந்தி பிரச்சார சபா சார்பில் நடந்த ஹிந்தி தேர்வில் 743 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்வினை தலைமை கண்காணிப்பாளராக கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் பணியாற்றினார். துணை தலைமை கண்காணிப்பாளர்களாக மின்னியல் துறை தலைவர் ஜான் செண்பகத்துரை மற்றும் அமைப்பில் துறை மூத்த விரிவுரையாளர் சந்திரசேகரன்
பணியாற்றினர்.
கல்லூரி விரிவுரையாளர்கள், ஆய்வக போதகர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


