செய்துங்கநல்லூரில் பொதுமக்களுக்கு அரசு திட்டங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் கைத்துல் மாலிள் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
துணைத் தலைவர் நாக்கிப் தலைமை வகித்தார்.
செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்பநாப பிள்ளை திறந்து வைத்தார். செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி நாதன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் காதர் , திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு உரிமை குழு துணை அமைப்பாளர் டாக்டர் கலிலூர் ரகுமான் , திமுக சிறுபான்மை பிரிவு கருங்குளம் ஒன்றிய செயலாளர் ஷேக் சிந்தா அப்பாஸ்,
அதிமுக கருங்குளம் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கோதர் , எஸ். டி. பி. ஐ. கட்சியின் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவர் அ பூ ஹ§பைஸ் உள்பட பலர் பேசினர். இத்திறப்பு விழாவில் செய்துங்கநல்லூர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அலியார்,வி.கோவில் பத்து பஞ்சாயத்து தலைவர் கொம்பன் ,விட்டலாபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயபதி , ஆறாம் பண்ணை ஜமாத் செயலாளர் அப்துல் கனி , ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல் காதர், தொழிலதிபர் க.ப.மு.ஜக்கரியா சாகிப், பைத்துல் மால் செயலாளர் யாசர் ,பைத்துல் மால் பொருளாளர் தாரிக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இத்திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அனைத்து விதமான அரசு சார்ந்த திட்டங்களுக்கும் இலவசமாக விண்ணப்பித்து தரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பைத்துல் மாலின் தலைவர் ஹாலித் ,ஊடகத் தொடர்பாளர் சேக் தாவூத் தலைமையில் பைத்துல் மாலின் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


